சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோணை கிராம கோவில் உண்டியல்கள் உடைப்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
செஞ்சி : கோணை கிராமத்தில் அய்யனாரப்பன், முனீஸ்வரன் கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் அய்யனார், முனீஸ்வரன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை கோவிலுக்கு பூசாரிகள் பூஜை செய்ய சென்றனர். அப்போது இரண்டு கோவில்களிலும் மர்ம நபர் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிசென்றிருந்தது

செஞ்சி : கோணை கிராமத்தில் அய்யனாரப்பன், முனீஸ்வரன் கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் அய்யனார், முனீஸ்வரன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை கோவிலுக்கு பூசாரிகள் பூஜை செய்ய சென்றனர். அப்போது இரண்டு கோவில்களிலும் மர்ம நபர் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிசென்றிருந்தது தெரியவந்தது. கடந்த முறை இந்த உண்டியல்களை திறந்து எண்ணிய போது முனீஸ்வரன் கோவிலில் 200 ரூபாயும் , அய்யனார் கோவிலில் 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்துள்ளது. அதே அளவிற்கு இந்த முறையும் பணம் இருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அனந்தபுரம் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்பிரமணியன், தனிப்பிரிவு ஏட்டு ஹரி மற்றும் போலீசார் சம்பவ இடத்தைபார்வையிட்டு விசாரித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X