ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், புதிதாக நகரும் ரேஷன் கடைகள் மூலம் குடியிருப்பு அருகே அரிசி, பருப்பு வினியோகம் செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய நகரும் ரேஷன் வாகனங்களை தொடங்கி வைத்தார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, எம்.எல். ஏ.,க்கள், மணிகண்டன், சதன்பிரபாகர் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: ராமநாதபுரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் வகையில் நகரும் ரேஷன்கடை மூலம் மண்ணெண்ணெய், துவரம்பருப்பு, அரிசி, கோதுமை, சர்க்கரை பாமாயில் வழங்கப்படும்.
மாவட்டத்தில் 71 அம்மா நகரும் ரேஷன்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,205 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக ரேஷன்கடை அமைக்க இயலாத இடங்களில் நகரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்,'எனக் கூறினார்.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா, ராம்கோ கூட்டுறவு தலைவர் முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலெட்சுமி, துணை பதிவாளர் ராஜவேலன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE