கட்டுமான பணி ஒப்பந்தத்தில் அனைத்து பணிகளும் உள்ளடக்கி இருக்கும். ஒப்பந்த ஆவணத்தில் அஸ்திவார வேலை முதல் பெயின்ட் அடிப்பது வரை குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது போன்ற சில ஒப்பந்த முறைகளை நாம் தெளிவாக தெரிந்து கொண்டு கட்டுமான பணியை துவங்குவது நல்லது.கட்டுமான நிறுவன ஒப்பந்தம்கட்டுமான நிறுவனம் இது போன்ற வேலைகளுக்கு தனி ஒப்பந்ததாரர்களை நியமிக்கும். அப்படி தனி ஒப்பந்தம் போட்டிருந்தால் அது குறித்த சந்தேகங்கள், பணி வேகம், தரம் பரிசோதித்து பார்க்கலாம். பிரதி ஆவணங்களை கட்டுமான நிறுவனத்திடம் கேட்டு பெறலாம். புதிய கட்டடங்கள் கட்டும் போது, கட்டுமான நிறுவனர் பெயின்டிங் வேலைக்கான ஒப்பந்த ஆவணங்கள் குறித்து அறிய வேண்டும்.வீட்டு உரிமையாளர் உரிமை, எதிர்காலத்தில் தனி பெயின்டிங் வேலை ஒப்பந்தம் குறித்து அறிய உதவும்.
இந்த வேலை செய்யும் பெயின்டர்கள் எந்த பெயின்ட் , எந்த அறைக்கு பெருத்தமாக இருக்கும் என யோசனை கூறும் அளவு இருப்பது நல்லது. ஒப்பந்தத்தில் இல்லாத இது மாதிரி யான விஷயங்களை உரிமையாளர் ரசனைக்கு ஏற்ப செய்வது சிறப்பு.பெயின்டிங் பணி ஒப்பந்தம்இந்த பெயின்டிங் பணிக்கான ஒப்பந்தத்தில் நான்கு பிரதான பிரிவுகள் இருக்க வேண்டும். கட்டடம் கட்டி முடித்தவுடன் சுவரில் ஒயிட் சிமென்ட் அடித்து பட்டி பார்த்தல், பிரைமர் அடித்து எமல்ஷன் பூசுதல், வாசல் நிலைகள், கதவு கிரில்களுக்கு பிரைமர் போட்டு கலர் பூசுதல், பாலீஷ் போடுதல் ஆகிய பணிகளை அவசியம் செய்ய வேண்டும்.
இந்த பணிகளுக்கு தனி கால அட்டவணை இருக்க வேண்டும். கால அட்டவணைக்கான தகவல்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்.இந்த நேரத்துக்குள் இந்த அளவிற்கான வேலைகளை, இந்த அளவான பொருட்களை, இத்தனை ஆட்களைக் வைத்து முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் தெளிவாக குறிப்பிடப்பிட வேண்டும். முக்கிய பணியாளர், பாதுகாப்பு பிரதான பொருட்கள், உபகரணங்கள் பயன்பாடு, யார் பொறுப்பில் இவை இருக்க வேண்டும்.முன் பணம் வழங்கப்படுமா என்றும் துல்லியமாக குறிப்பிட்டால் பிரச்னை ஏற்படாது என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE