வீட்டு மாடிப்படிகளை வெளிப்புறம் அமைக்க விரும்பினால் அழகாக காட்சியளிப்பது போல் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைக்கும் போதே மாடிப்படிகள் எங்கு வர வேண்டும் என திட்டமிட வேண்டும். வேலைகளைமுடித்த பின் மீதமுள்ள இடத்தில் மாடிப்படிகளை அமைத்தால் அது வீட்டின் அமைப்பை சிதைத்துவிடும்.படிக்கட்டில் பிடிமான கைப்பிடிபடிக்கட்டுகளை பெரியவர்களும், குழந்தைகளும் ஏறி இறங்க எளிதாக இருக்கும்படி அமைக்க வேண்டும்.
குறுகலான இடத்தில் மாடிப்படிகள் வந்தால் அதற்குரிய இடம், தோற்றம், அளவுகள் ஆகிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அளவில் சிறிய படிகள் அமைக்கும்படி இருந்தால் கான்கிரீட் தவிர்த்து மாற்று வழிகளை பின்பற்றலாம்.படிக்கட்டுகள் உயரம் குறைவாகவும், அகலமாகவும், வழுக்காமல் நல்ல பிடிப்புடன் இருக்கும்படி அமைக்க வேண்டும். படிக்கட்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளி சமமாக இருக்க வேண்டும். படிக்கட்டுகள் வெவ்வேறு அளவுகளில் இருக்க கூடாது. படியில் ஏறுபவர்களுக்கு வழுக்காதபடி பிடிமானத்துடன் இருக்கும் கைப்பிடிகளை அமைக்க வேண்டும்.வீட்டிற்குள் கான்கிரீட் தவிர்த்தல்வீட்டிற்கு உள்ளே படிக்கட்டுகள் அமைப்பதாக இருந்தால் கான்கிரீட் தவிர்த்து மற்ற வழிகளை பின்பற்று வது சிறந்தது. அவற்றை அழகுபடுத்த எளிதாக இருக்கும். வீட்டு மாடி உயரத்திற்கு ஏற்ப படிக்கட்டுகளை ஒரே நீளத்தில் அமைக்க கூடாது. படிக்கட்டுகளில் ஏறி குறிப்பிட்ட உயரத்தில் உள்ள 'லேண்டிங்கில்' இருந்து இடது அல்லது வலதுபுறம் திரும்பி ஏறுவது போல் அமைக்க வேண்டும்.
படிக்கட்டுகள் ஏறுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அழகாக இருப்பதற்காக வழுக்கும் தன்மை கொண்ட கற்களைப் பதிக்காமல், சொரசொர தன்மை கொண்ட கற்கள் பதிக்க வேண்டும். வழுக்கும் தன்மையற்ற படிக்கட்டுகள் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். படிக்கட்டுகளின் கீழே அமைந்த முக்கோண பகுதிகளை அலமாரியாக பயன்படுத்தலாம்.படிக்கட்டு ஸ்டோர் ரூம்படிக்கட்டின் கீழ் பகுதி பெரிதாக இருந்தால் சிறிய ஸ்டோர் ரூமாக மாற்றலாம்.
படிக்கட்டு அலமாரியில் புத்தகங்கள், பத்திரிகைகள் அடுக்கி வைக்கலாம். படிகள் அகலமாக இருந்தால் பக்கவாட்டில் பூந்தொட்டிகளை வைக்கலாம். பழைய வீடுகளில் உள்ள வழுவழு படிகள் மீது தென்னம் நார், உறுதியான விரிப்பு பயன்படுத்தினால் வழுக்காது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE