வாலாஜாபாத் : வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே, தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இக்கட்டடம் அருகே, தாசில்தார் குடியிருப்பு கட்டடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் என, பல வசதிகள் மேம்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்த அலுவலக வளாகத்தின் தரை பகுதிகளில், பல லட்சம் ரூபாய் செலவில், 'ஹாலோ பிளாக்' கற்கள் என, அழைக்கப்படும் அச்சு கற்களை, பொதுப்பணித் துறையினர் பதித்து உள்ளனர்.எனினும், மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில், தண்ணீர் வழிந்தோடுவதற்கு ஏற்றபடி, தரை பகுதியில் சாய்தள வசதி ஏற்படுத்தவில்லை என, புகார் எழுந்துள்ளது.
'நிவர், புரெவி' புயலின் போது பெய்த மழை நீர், வாலாஜாபாத் தாலுகா அலுவலக வளாகத்தில், தற்போதும் தேங்கி நிற்கிறது.இதனால், வருவாய் துறை சான்று விண்ணப்பிக்கவும், பெறவும் வருவோர், தண்ணீர் கலந்த சகதியில் கடந்து, அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய மழை நீரை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE