காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் ஏரி நிரம்பியதால், விவசாயிகள், விவசாய பணிகளை துவக்கி உள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கத்தில், பொதுப்பணித் துறை பராமரிக்கும் ஏரி உள்ளது. இந்தாண்டு, வடகிழக்கு பருவ மழையால், ஏரி முழுமையாக நிரம்பி, கலங்கலில் நீர் வெளியேறியது. இதனால், விவசாய பணியை, விவசாயிகள் துவங்கியுள்ளனர்.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:ஆற்பாக்கம் ஏரி நீர்ப்பாசனத்தில், 950 ஏக்கர் நிலங்களில், விவசாயம் செய்யப்படுகிறது. கடந்தஆண்டு, போதிய மழை இல்லாததால், ஏரி பாசனத்தை நம்பிய பலர், விவசாயம் செய்யவில்லை.
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழையால், ஏரி முழுமையாக நிரம்பியது. இதனால், இந்தாண்டு விவசாயத்திற்கு, தண்ணீர் பிரச்னை இருக்காது என்பதால், விவசாய பணிகளை துவங்கி விட்டோம்.மாமண்டூர் ஏரி நிரம்பி இருந்தால், எங்களுக்கு முன்கூட்டியே தண்ணீர் வந்திருக்கும். இருப்பினும், சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால், ஏரி முழுமையாக நிரம்பி விட்டது; இருபோகம் விவசாயம் செய்யலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE