மாமல்லபுரம் : குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள, தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், டாக்டர் ஆனந்த் அறிவுறுத்தினார்.
கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனையில், நேற்று முன்தினம், மருத்துவமனை துாய்மை பராமரிப்பை, ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு செய்தார்.இத்துறை நிர்வாக குழுவினரிடம், குழந்தைகளை, கொரோனா வைரஸ் பாதிக்காமல் தடுப்பது, சத்தான உணவுகளை வழங்குவது குறித்து, அறிவுறுத்தினார்.குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு தொடர்பாக கட்டணமில்லா, 1800 9929 457 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என, அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE