புவனகிரி : தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இணைய தளம் மூலம் நடந்த கலாம் உலக சாதனை யோகா போட்டியில் சிதம்பரம் அண்ணா மலை நகர் ஏ.ஆர்.ஜி., பள்ளி மாணவர்கள் எஸ்.ஜி.டி.எப்., கேடயத்துடன் பதக்கங்களை பெற்றனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இணைய தளம் மூலம் 'கலாம் உலக சாதனை யோகா போட்டி' நடந்தது. இதில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ஏ.ஆர்.ஜி., அகாடமி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 116 பேர் மற்றும் ஆசிரியர்கள் 16 பேர் பங்கேற்றனர்.இதில் சிறந்த பள்ளிக்கான எஸ்.ஜி.டி.எப்., கேடயத்துடன் பதக்கங்களை பெற்றதுடன், சிறந்த பயிற்றுனராக ஹரிகரன் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ஆடியபாதம், முதல்வர் கீதா கணேசன், செயலர் கணேசன் ஆகியோர் பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE