சென்னை:'திறந்தநிலை பல்கலையில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர, வரும், 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை பதிவாளர் ரத்னகுமார் வெளிட்ட செய்திக்குறிப்பு:தமிழக திறந்தநிலை பல்கலையில், முழுநேரம் மற்றும் பகுதி நேர, பிஎச்.டி., படிப்பு, நேரடி முறையில் நடத்தப்படுகிறது. பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அனுமதியுடன், இந்த படிப்பு நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்புவோர், 2021ம் ஆண்டு ஜனவரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.பொருளியல், மேலாண்மையியல், கல்வியியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், புவியியல், கணினி அறிவியல், தமிழ்,குற்றவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான தேர்வில் தகுதி பெற்று, யு.ஜி.சி., நிதியுதவி பெறலாம். தகுதியுள்ள முழுநேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு, பல்கலை சார்பில், மாதம், 5,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை, பல்கலையின், www.tnou.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜன., 4க்குள் அனுப்ப வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE