பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய கட்டுமானங்களில் உட்புற முற்றம் அவசியம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
வீடாக இருந்தாலும் சரி, பிற கட்டுமானங்களாக இருந்தாலும் சரி உள்ளே வெளிச்சம், காற்றோட்டம் இருக்கும்படி கட்டமைக்க வேண்டும். அப்போது தான் உள்ளே இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதற்காக பெரிய கட்டுமானங்களில் உட்புற முற்றம் அமைக்கப்படுகிறது.இயற்கை வெளிச்சம், காற்று கட்டுமானத்திற்குள் வந்து விட்டால் மின் விளக்கு, மின் விசிறி, ஏ.சி., போன்ற மின் சாதனங்கள் இயக்குவதை

வீடாக இருந்தாலும் சரி, பிற கட்டுமானங்களாக இருந்தாலும் சரி உள்ளே வெளிச்சம், காற்றோட்டம் இருக்கும்படி கட்டமைக்க வேண்டும். அப்போது தான் உள்ளே இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதற்காக பெரிய கட்டுமானங்களில் உட்புற முற்றம் அமைக்கப்படுகிறது.

இயற்கை வெளிச்சம், காற்று கட்டுமானத்திற்குள் வந்து விட்டால் மின் விளக்கு, மின் விசிறி, ஏ.சி., போன்ற மின் சாதனங்கள் இயக்குவதை குறைத்து மின்சாரத்தை சேமிக்கலாம். மின் சாதனங்கள் வெளியிடும் வெப்பமும் கட்டுமானத்திற்குள் இருக்காது.வீடுகளில் வழக்கமாக அமைக்கப்படும் 'சீலிங்' என்ற மேற்கூரை அமைக்கப்படும். சீலிங் அமைப்பு நன்றாக உயர்த்தப்பட்டு, சூரிய வெளிச்சம், காற்று ஆகிய இயற்கை சூழல் கட்டுமானத்திற்குள் வருவது போன்று அமைக்கப்படுவது 'ஏட்ரியம்' என்ற அமைப்பாகும்.இந்த அமைப்பில் கட்டடத்தின் மையப்பகுதியில் வெளிச்சமும், காற்றும் உள்ளே வர வசதியாக கூரைப்பகுதி உயரமாக, திறப்புகளுடனும் இருக்கும். பொதுவாகஇந்த அமைப்பு மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பெரிய கட்டுமான மையப்பகுதியில் அமைக்கப்படுகிறது. இதை 'உட்புற முற்றம்' எனக்கூறினால் பொருத்தமாக இருக்கும்.

இதே போல் பெரிய கட்டுமான மேற்கூரைகளில் சுழலும் உருண்டை வடிவ மெல்லிய உலேகா விசிறிகள் அமைக்கப்படுகிறது. இது காற்றில் தொடர்ந்து சுற்றி கொண்டே இருப்பதால் வெளியே உள்ள காற்று கட்டுமானத்திற்குள் வரும். உள்ளே உள்ள வெப்ப காற்று வெளியே சென்று விடும். சமையலறை'எக்ஸ்சாஸ்ட் போன்' போன்ற அமைப்பின் மறு வடிவம் தான் இது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X