கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் நில விவகாரத்தில் தவறான தகவல்

Updated : டிச 20, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
மதுரை,: 'மதுரை தோப்பூரில், எய்ம்சுக்கு, மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை' என, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் அடிப்படையில், நாளிதழ்களில் செய்தி வெளியாகிஉள்ளது. 'இதில், தவறான தகவல் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன?' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது.மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் நில விவகாரத்தில் தவறான தகவல்

மதுரை,: 'மதுரை தோப்பூரில், எய்ம்சுக்கு, மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை' என, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் அடிப்படையில், நாளிதழ்களில் செய்தி வெளியாகிஉள்ளது.

'இதில், தவறான தகவல் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன?' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது.மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 'கட்டுமானத்திற்கு தாமதமின்றி நிதி ஒதுக்க வேண்டும். கட்டுமானத்திற்கு, டெண்டர் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்' என, 2018ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.கடந்த, 2018 டிச., 6ல் விசாரணையின்போது, மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பு செயலர், 'கேபினட் ஒப்புதல் கிடைத்த பின், எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கி, 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்' என, அறிக்கைசமர்ப்பித்தார்.


இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை பைசல் செய்தனர். இதை நிறைவேற்ற, மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை. 'தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும். அதற்கான நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்' என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனு தாக்கல் செய்தார்.நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.நீதிபதிகள்: 2019 ஜன., 27ல், எய்ம்சுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். எய்ம்சுக்கான நிலத்தை மாநில அரசு ஒப்படைக்கவில்லை என, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் அடிப்படையில், நாளிதழ்களில் செய்தி வெளியாகிஉள்ளது.

இதற்கான காரணத்தை, மாநில அரசு தரப்பில் தெளிவுபடுத்தாவிடில், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, 'சம்மன்' அனுப்ப நேரிடும்.இவ்வாறு எச்சரித்து, சிறிது நேரம் ஒத்தி வைத்தனர். சிறிது நேரத்திற்கு பின் விசாரணை நடந்தது.


மாநில அரசு தரப்பு: 2019ல், 200 ஏக்கர், கூடுதலாக, 22 ஏக்கரை பிப்ரவரியில் ஒப்படைத்துவிட்டோம். சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.நீதிபதிகள்: தமிழகம், உ.பி., மேற்கு வங்கம், பஞ்சாபில் எய்ம்ஸ் அமைக்க, 2015ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏன்?
மத்திய அரசுத் தரப்பு: நிலத்தை, மாநில அரசு ஒப்படைத்து விட்டது. பணி துவங்க நிதி முக்கியம். நிதி தேவைக்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் கடன் பெற, 2021 மார்ச், 31க்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும். பின், 45 மாதங்களில் பணி நிறைவடையும்.நீதிபதிகள்: நிலத்தை ஒப்படைக்கவில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் பெற்ற தகவல் அடிப்படையில், நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு தவறான தகவல் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன?இவ்வாறு அதிருப்தி வெளியிட்டு, 'உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
19-டிச-202016:58:04 IST Report Abuse
blocked user அந்த 39 பேர் என்ன செய்கிறார்கள் ?
Rate this:
Cancel
19-டிச-202014:28:36 IST Report Abuse
ஆரூர் ரங் போன ஆட்சியில் அன்னிய நிதியில்தான் மெட்ரோ கட்டினர்.🤔 அதனாலேயே தாமதமும் ஆனது. இன்னும் போதிய பயணிகளின்றி மெட்ரோ நஷ்டத்தில் ஓடுவதால் பஸ் கட்டணத்தை அதற்கு சமமாக ஏற்ற அன்னிய அழுத்தம் வருகிறது. ஆனால் ஏற்கனவே 2 மருத்துவக் கல்லூரி பெரிய மருத்துவ மனைகள் உள்ள மதுரைக்கு எய்ம்ஸ் ஒன்றும் அவசரத் தேவையில்லை. பிற்பட்ட மாவட்டம் எதற்காவது மாற்றியிருக்கலாம்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
19-டிச-202011:05:38 IST Report Abuse
பாமரன் அரசு தரப்பில் மக்கள் பயன்பாட்டுக்காக ஒரு மருத்துவமனை கட்ட நாட்டை வல்லரசாக (🤭🤭) மாற்றிய ஒரு அரசு இன்னொரு நாட்டிடம் பிச்சை எடுக்க போகுதாம்... அதை கேட்க துப்பில்லாத பகோடாஸ் சம்பந்தமில்லாத திமுகவை திட்டுதுங்க...😠😠 எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு டீம்காதான்... ஆங் கொரோனா விவசாயிகள் போராட்டத்தையும் லிஸ்டில் சேர்த்துக்கவும்...
Rate this:
blocked user - blocked,மயோட்
19-டிச-202016:59:27 IST Report Abuse
blocked userஆமா... அந்த 39 பேருக்கும் ஒன்றும் தெரியாதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X