அதிகாரிகள் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் பொறுப்பேற்பு

Added : டிச 18, 2020
Share
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலையத் துறையின் பல கோவில்களில், அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.காஞ்சிபுரம் உதவி ஆணையராக இருந்த ரேணுகாதேவி, சென்னை மாநகர இணை ஆணையராக பதவி உயர்வு பெற்று, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் உதவி ஆணையர் ஜெயா, கூடுதல் பொறுப்பாக, காஞ்சிபுரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அதேபோல், ஹிந்து சமய

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலையத் துறையின் பல கோவில்களில், அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

காஞ்சிபுரம் உதவி ஆணையராக இருந்த ரேணுகாதேவி, சென்னை மாநகர இணை ஆணையராக பதவி உயர்வு பெற்று, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் உதவி ஆணையர் ஜெயா, கூடுதல் பொறுப்பாக, காஞ்சிபுரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அதேபோல், ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளராக இருந்த சுரேஷ்குமார், ஸ்ரீபெரும்புதுார் சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி திருவானைக்கோவில் ஆய்வாளராக இருந்த பிரித்திகா, காஞ்சிபுரம் சரக ஆய்வாளராக, நேற்று பொறுப்பேற்றார்.ஹிந்து சமய அறநிலையத் துறையில் காஞ்சிபுரத்துக்கு என, புதிதாக இணை ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டு, சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த லட்சுமணன், காஞ்சிபுரம் இணை ஆணையராக கூடுதல் பொறுப்பேற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X