புவனகிரி : புவனகிரி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி பகுதிகளில் மழையில் பாதித்த கிராமங்களில் பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.
புவனகிரி கிழக்கு ஒன்றியம் மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி, தையாக்குப்பம், பாலுாத்தங்கரை, லால்புரம், மேல்அனுவம்பட்டு, சி.முட்லுார்,தில்லைநாயகபுரம் ஊராட்சிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை பாதிப்பு குறித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து நிவாரணபொருட்களை வழங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் குமார், மேல் புவனகிரி ஒன்றிய துணைச் சேர்மன் வாசுதேவன், கவுன்சிலர்கள் லதா ராஜேந்திரன், சீனிவாசன், முன்னாள் ஊராட்சித் தலைவர் நடனமயிலோன், ஒன்றிய இளைஞரணிச்செயலாளர் செழியன், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம், கூட்டுறவு வங்கித் தலைவர் ஆறுமுகம், மாவட்ட தொழில் நுட்ப அணி பொருளாளர் சுவாமிநாதன், ஊராட்சித் தலைவர் சுடர்விழி அன்பரசன், தகவல்தொழில்நுட்ப பிரிவு கிருபாகரன், ஊராட்சித் துணைத் தலைவர் கலா அய்யாசாமி,கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரேம் குமார், சுபாஷ் சந்திரபோஸ் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE