சென்னை : பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை - திருப்பதி சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை, எம்.ஜி. ஆர்., சென்ட்ரலில் இருந்து, ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு தினமும் காலை, 6:25 மணிக்கும், திருப்பதியில் இருந்து எம்.ஜி.ஆர்.,சென்ட்ரலுக்கு, காலை, 10:15 மணிக்கும், சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், இந்த ரயில்கள், வரும், 19ம் தேதியில் இருந்து, 25ம் தேதி வரை, இரு வழித் தடத்திலும், எம்.ஜி. ஆர்., சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே மட்டும் இயக்கப்படும். 26ம் தேதி, இந்த ரயில்கள், எம்.ஜி. ஆர்.,சென்ட்ரல் - திருப்பதி இடையே, முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது
ராமேஸ்வரத்தில் இருந்து, குஜராத் மாநிலம், ஓகாவுக்கு, வரும், 18 மற்றும், 25ம் தேதிகளில் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லாமல், பாதை மாற்றம் செய்யப்பட்டு, காட்பாடி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்நாகர்கோவிலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம், சாலிமாருக்கு, வரும், 20ம் தேதி மதியம், 2:45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், திருப்பதி செல்லாமல், காட்பாடி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE