பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை- -திருநெல்வேலி 2வது அகல ரயில் பாதை பணிகள் தீவிரம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையிலிருந்து வாஞ்சிமணியாச்சி வழியாக நாகர்கோவில் துாத்துக்குடிக்கு 2வது அகல ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடக்கின்றன. 2021 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரையிலிருந்து குமரி வரை ஒற்றை பாதை மட்டுமே உள்ளதால் கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை. மதுரையிலிருந்து

மதுரை : மதுரையிலிருந்து வாஞ்சிமணியாச்சி வழியாக நாகர்கோவில் துாத்துக்குடிக்கு 2வது அகல ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடக்கின்றன. 2021 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை-கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரையிலிருந்து குமரி வரை ஒற்றை பாதை மட்டுமே உள்ளதால் கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை. மதுரையிலிருந்து வாஞ்சிமணியாச்சி வழியாக துாத்துக்குடி திருநெல்வேலிக்கு 2வது அகல ரயில் பாதை அமைக்கும் பணி ரூ.1200 கோடியில் மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. கடம்பூர்-கங்கைகொண்டான் மணியாச்சி-தட்டப்பாறை இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கங்கைகொண்டான்-திருநெல்வேலி இடையிலான பணிகளை 2021 மார்ச் மதுரை - கடம்பூர் திருநெல்வேலி-நாகர்கோவில் இடையிலான பணிகளை 2021 க்குள் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடையுத்தரவால் வடமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மதுரை - திருப்பரங்குன்றம் இடையே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிகள் மந்தகதியில் நடக்கிறது.ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை - போடி அகல பாதை திட்டத்தில் ஆண்டிப்பட்டி- தேனி இடையில் 17 கி.மீ.க்கு ரூ.80 கோடி தேனி-போடி இடையில் 15 கி.மீ.க்கு ரூ.75 கோடியில் பணிகள் 2021 அக்.க்குள் முடிக்கப்படும்.

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு ரூ.2175 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. தற்போது மீளவிட்டான் முதல் மேலமருதுார் வரை பணிகள் முடிந்துள்ளன. மீளவிட்டான் - அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை -திருப்பரங்குன்றம் இடையில் அகலபாதை அமைக்க 800 எக்டேர் கையகப்படுத்தப்படவுள்ளன. இப்பணிகளை 2025 மார்ச் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X