சென்னை : 'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஜுவல்லரி' நியாயமான விலைக்கான வாக்குறுதி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் முன்னணி, தங்கம் மற்றும் வைர விற்பனை நிறுவனமாக, மலபார் கோல்டு அண்டு- டைமண்ட்ஸ் ஜுவல்லரி உள்ளது. கேரளாவில், 1993ல் துவக்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது, 10 நாடுகளில், 260க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.சமீபத்தில், இந்நிறுவனம், சீரான விலை கொள்கையாக, 'ஒரு நாடு; ஒரே தங்க விலை' என்ற, திட்டத்தை அறிமுகம் செய்தது.தொடர்ச்சியாக, நகைகளுக்கு, நியாயமான சேதாரத்தை நிர்ணயிக்கும் வகையில், நியாயமான விலைக்கான வாக்குறுதியை அறிமுகம் செய்து உள்ளது.
ஒரே தங்க விலை, நியாயமான விலைக்கான வாக்குறுதி, புதிய வடிவமைப்புகள் மற்றும் இதர பலன்களுடன், இந்த சீசனில், தங்கம் வாங்க ஏற்ற இடமாக, 'மலபார் கோல்டு அண்டு- டைமண்ட்ஸ்' திகழ்கிறது
வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பணத்திற்கு நியாயமான மதிப்பு வழங்கப்படுவதை, 'நியாயமான விலைக்கான வாக்குறுதி திட்டம்' உறுதி செய்கிறது. நகைகள் மீது, மிகக் குறைவாக, 3.9 சதவீதத்தில் இருந்து, சேதாரம் நிர்ணயிக்கப்படும். இதனால், விலை ஒன்றாக அமைகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக்காக பேசி, நேரத்தை வீணாக்க தேவையில்லை.
எம்.பி.அகமது,'மலபார்' குழும தலைவர்'மலபார் கோல்டு -அண்டு டைமண்ட்ஸ்' நிறுவனத்தில், நகைகள் அனைத்தும், திரும்பி வாங்கிக் கொள்ளும் உத்தரவாதம், இலவச காப்பீடு, 100 சதவீதம் ஹால்மார்க் சான்றிதழ் பெற்ற தங்கம், முறையாக கொள்முதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வாழ்நாள் பராமரிப்பு என, சந்தையில் மற்றவர்கள் வழங்காத அம்சங்களை கொண்டுள்ளன. இந்த நோக்கில், நியாயமான விலைக்கான வாக்குறுதியை, வாடிக்கையாளர்கள் வரவேற்பர் என நம்புகிறேன்.ஒ.அஷர், மலபார் குழுமஇந்திய செயல்பாடுகள் நிர்வாக இயக்குனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE