சென்னை :தமிழக பா.ஜ. தலை வர் முருகன் இன்று முதல் மூன்று நாட்கள் டெல்டா மாவட்டங் களில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார்.
நாளைய கூட்டத்தில் மத் திய அமைச்சர் வி.கே.சிங்பங்கேற்கிறார்.மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மத்திய வேளாண் சட்டங்களின் பயன்கள் குறித்து தமிழக பா.ஜ. நிர்வாகிகள் விவசாயிகளை சந்தித்து விளக்கி வருகின்றனர். மாநில தலைவர் முருகன் டெல்டா மாவட்டங்களில் மூன்று நாட்கள்சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இன்று காலை 10:00 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் குன்னம்; மதியம் 12:00க்கு அரியலூர் மாவட்டம் டி.பலூர்; மாலை 3:00க்கு தஞ்சாவூர் வடக்கு திப்பிராஜபுரம்; மாலை 5:00 மணிக்கு அம்மாபேட்டை; இரவு 7:00க்கு கள்ளபெரம்பூர் ஆகிய இடங்களில் நடக்கும் விவசாயிகள் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்கிறார்.
நாளை காலை 10:00 மணிக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் உடன் இணைந்து தஞ்சாவூரில் விவசாயிகளை சந்திக்கிறார். மதியம் 12:00 மணிக்கு ஒரத்தநாடு; மாலை 3:00க்கு தலையாமங்கலம்; மாலை 5:00க்கு திருவாரூர்பரவாக்கோட்டை; இரவு 7:00க்கு விக்கிரபாண்டியம் கிராமத்தில் விவசாயிகள் சந்திப்பு நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE