சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்; 46 கிலோ பறிமுதல்; 3 பேர் கைது

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை : ஆந்திராவில் இருந்து, புதுவண்ணாரப்பேட்டைக்கு கஞ்சா கடத்திய, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.ஆந்திராவில் இருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களில், காய்கறிகள் ஏற்றி வருவது போல, கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை, வைத்தியநாதன் பாலம், இளையா தெரு சந்திப்பு அருகே, கஞ்சா மூட்டைகளை கடத்தி சென்ற,

சென்னை : ஆந்திராவில் இருந்து, புதுவண்ணாரப்பேட்டைக்கு கஞ்சா கடத்திய, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திராவில் இருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களில், காய்கறிகள் ஏற்றி வருவது போல, கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை, வைத்தியநாதன் பாலம், இளையா தெரு சந்திப்பு அருகே, கஞ்சா மூட்டைகளை கடத்தி சென்ற, 'டாடா ஏஸ்' வாகனத்தை, மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபிரபு தலைமையிலான போலீசார், நேற்று காலை மடக்கினர்.

தப்ப முயன்ற, கும்மிடிப்பூண்டி, சித்தாலகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் தினேஷ்குமார், 31, மற்றும் இவரது கூட்டாளிகளான, கும்மிடிப்பூண்டி கோட்டாக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜலாலுதீன், 31, காசிமேடு, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த காளி, 22, ஆகியோரை கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட, 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரிடம், தினேஷ்குமார் கூறியதாவது:ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறேன். லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில், ஆந்திராவுக்கு காய்கறி ஏற்றி வரச்செல்வேன். அப்போது, சில மர்ம நபர்கள், சில பார்சல்களை ஏற்றி, கும்மிடிப்பூண்டி மற்றும் புதுவண்ணாரப்பேட்டையில், அவர்கள் தெரிவிக்கும் இடத்தில் இறக்கி விடுமாறு கூறுவர். ஒரு பார்சலுக்கு, 1,000 ரூபாய் தருவர்.ஒரு நாள் பார்சலை திறந்து பார்த்தேன்.

அதில் கஞ்சா இருந்தது. மர்ம நபர்கள், ஒரு பார்சல், 5,000 ரூபாய்க்கு வாங்கி வந்து, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பது தெரியவந்தது. இதனால், என் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நானே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டேன்.இதற்கு முன், மூன்று பேரும் ஒருமுறை கஞ்சா கடத்தலில் ஈடுட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X