அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., நிறுவனங்கள் ரூ.39,831 கோடி முதலீடு

Added : டிச 19, 2020
Share
Advertisement
திருமங்கலம் : ''தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 2018-19 ல் ரூ.39,831 கோடி முதலீடு செய்துள்ளன. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர் உற்பத்தி கொள்கையின்படி அதன் உற்பத்தி நுாறு பில்லியன் டாலராக உயரும்,'' என, திருமங்கலம் கப்பலுாரில் சி.ஐ.ஐ., கனெக்ட் காணொலி கருத்தரங்கை துவக்கி வைத்து அமைச்சர் உதயகுமார் பேசினார். தியாகராஜர் மில்லில் நடந்த இக்கருத்தரங்கின்

திருமங்கலம் : ''தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 2018-19 ல் ரூ.39,831 கோடி முதலீடு செய்துள்ளன. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர் உற்பத்தி கொள்கையின்படி அதன் உற்பத்தி நுாறு பில்லியன் டாலராக உயரும்,'' என, திருமங்கலம் கப்பலுாரில் சி.ஐ.ஐ., கனெக்ட் காணொலி கருத்தரங்கை துவக்கி வைத்து அமைச்சர் உதயகுமார் பேசினார்.

தியாகராஜர் மில்லில் நடந்த இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து சி.ஐ.ஐ., மாநில தலைவர் ஹரிதியாகராஜன் விளக்கினார்.அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உற்பத்தியை கொள்கையை முதல்வர் பழனிசாமி சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி 2025ல் மென்பொருள், ஹார்டுவேர் உற்பத்தி அதிகரிக்கும். தமிழக எல்காட் நிறுவனம் ரூ. 11,974 கோடி ஐ.டி., துறையில் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து வெற்றிகரமாக பெற்றுள்ளது.

ஐ.டி., மற்றும் ஐ.டி.எஸ்., ஏற்றுமதி ரூ. 1.39 லட்சம் கோடிக்கு நடந்துள்ளது. இது கடந்தாண்டை விட 10 சதவீதம் உயர்வு.கொரானா ஊரடங்கு காலத்திலும் கூட தமிழகம் மற்ற மாநிலங்களை விட அந்நிய முதலீடுகளை அதிகம் ஈர்த்து உள்ளது. 132 திட்டங்களுக்கு ரூ.23,332 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.மாநிலத்தில் ரூ.1815 கோடியில் பாரத் நெட் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் 12,524 கிராமங்கள் ஆப்டிக்கல் பைபர் நெட்ஒர்க் மூலம் தொலைதொடர்பு வசதி பெறும். அதிவேக இன்டர்நெட் சேவை நகர்ப்புறங்களில் கிடைக்க ரூ.500 கோடி தமிழக அரசு முதலீடு செய்ய இருக்கிறது., என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X