அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் முருகன் சுற்றுப்பயணம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை,:தமிழக பா.ஜ., தலைவர் முருகன், இன்று முதல் மூன்று நாட்கள், டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார். நாளையக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்கிறார். மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய வேளாண் சட்டங்களின் பயன்கள்

சென்னை,:தமிழக பா.ஜ., தலைவர் முருகன், இன்று முதல் மூன்று நாட்கள், டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார்.

நாளையக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்கிறார். மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய வேளாண் சட்டங்களின் பயன்கள் குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், விவசாயிகளை சந்தித்து, விளக்கி வருகின்றனர்.


கூட்டம்



மாநிலத் தலைவர் முருகன், டெல்டா மாவட்டங்களில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகள் சந்திப்பு கூட்டங்களில், பங்கேற்க உள்ளார்.இன்று காலை, 10:00 மணிக்கு, பெரம்பலுார் மாவட்டம், குன்னம்; பகல், 12:00க்கு, அரியலுார் மாவட்டம், டி.பலுார்; மாலை, 3:00க்கு, தஞ்சாவூர் வடக்கு, திப்பிராஜபுரம்; மாலை, 5:00 மணிக்கு, அம்மா பேட்டை; இரவு, 7:00க்கு, கள்ளபெரம்பூர் ஆகிய இடங்களில் நடக்கும், விவசாயிகள் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்கிறார்.


விவசாயிகள் சந்திப்பு



நாளை காலை, 10:00 மணிக்கு, மத்திய அமைச்சர் வி.கே.சிங் உடன் இணைந்து, தஞ்சாவூரில், விவசாயிகளை சந்திக்கிறார்.பகல், 12:00 மணிக்கு ஒரத்தநாடு; மாலை, 3:00க்கு தலையா மங்கலம்; மாலை, 5:00க்கு, திருவாரூர் பரவாக்கோட்டை; இரவு, 7:00க்கு விக்கிரபாண்டியம் கிராமத்தில், விவசாயிகள் சந்திப்பு நடக்கிறது.நாளை மறுதினம், காலை, 9:00 மணிக்கு, திருவாரூர் - தில்லைவிளாகம்; பகல், 12:00க்கு, நாகப்பட்டினம் - மருதுார்; மாலை, 3:00க்கு, கீழையூர்; மாலை, 6:00 மணிக்கு, கொள்ளிடம் ஆகிய இடங்களில் நடக்கும், விவசாயிகள் சந்திப்பு கூட்டங்களில் முருகன் பங்கேற்று, வேளாண் சட்டங்களின் பயன்களை, எடுத்துரைக்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X