நீலாங்கரை : நடத்தையில் சந்தேகப்பட்டு, அதனால் ஏற்பட்ட தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, மேட்டு காலனியைச் சேர்ந்தவர் ஹரி, 36; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி கோமதி, 35; சென்னை மாநகராட்சி, தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார்.இருவரும், 15 ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனர். மது போதைக்கு அடிமையான ஹரி, மனைவி மீது சந்தேகப்பட்டு, தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல், நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஹரி, மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின், நீலாங்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.இது குறித்து விசாரித்த போலீசார், ஹரியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.பெற்றோர் ஆதரவின்றி, நிர்க்கதியாகி நிற்கும் பிள்ளைகளை நினைத்து, அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE