நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேரும் குப்பைகளை பெண்ணையாற்றின் கரையில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வான்பாக்கம் பகுதியில் மக்கள் சாலை மறியல் செய்தனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி குப்பைகளை கடந்த வாரம் பெண்ணையாற்றின் கரையில் கொட்டச் சென்ற லாரியை விவசாயிகள் மடக்கி, இனி ஆற்றின் கரையில் கொட்டினால் லாரியை சிறைபிடிப்போம் என எச்சரித்தனர்.ஆனால் அப்பகுதியிலேயே குப்பையை கொட்டியதால் ஆத்திரமடைந்த வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு மக்கள் நேற்று காலை குப்பை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்து கஸ்டம்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட் டனர்.நகராட்சி துாய்மை அலுவலர் சக்திவேல், வருவாய் அலுவலர் கருணாமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் பேச்சு வார்த்தை நடத்தினர்.குப்பையை அங்கிருந்து அகற்ற வேண்டுமென மக்கள் கோரினர்.
பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றின் கரையில் கொட்டியிருந்த குப்பையை அகற்றிய பிறகு மறியலை வாபஸ் பெற்றனர். சாலை மறியலால் காலை 10.30 முதல் 11 மணி வரை போக்குவரத்து பாதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE