தமிழ்நாடு

நம்பிக்கை! கண்டலேறு அணை நீர்திறப்பால்... கிருஷ்ணாவில் நீர்வரத்து உயரும்

Updated : டிச 20, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு மீண்டும் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்து உள்ளது.சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும்.இந்த நீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்காக, ஆந்திரா மற்றும் தமிழக அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு
நம்பிக்கை! கண்டலேறு அணை நீர்திறப்பால்... கிருஷ்ணாவில் நீர்வரத்து உயரும்

சென்னை : ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு மீண்டும் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும்.இந்த நீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்காக, ஆந்திரா மற்றும் தமிழக அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவினர் நடத்திய பேச்சுக்கு பின், செப்டம்பரில், தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதுவரை, 4.40 டி.எம்.சி., நீர், தமிழகத்தின் ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்' எல்லைக்கு வந்துள்ளது.

சில நாட்களாக, நீர்வரத்து குறைந்திருந்தது. இதற்கு, கால்வாயின் இரண்டு புறங்களிலும் உள்ள ஆந்திர விவசாயிகள், சாகுபடிக்கு, அதிகளவில் நீரை எடுத்ததே காரணம்.தற்போது, அங்கு சாகுபடிக்கான நீர் தேவை குறைந்துள்ளது. அவ்வப்போது, மழையும் பெய்து வருகிறது. எனவே, கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட நீர், தமிழகத்திற்கு அதிகளவில் வர துவங்கியுள்ளது. நேற்று வினாடிக்கு, 791 கன அடி நீர் கிடைத்தது.இம்மாத இறுதிக்குள், 6 டி.எம்.சி., தண்ணீர் வரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
21-டிச-202010:45:37 IST Report Abuse
seshadri This Krishna water project brought to chennai by MGR the new veeranam project was designed and implemented by Jayalalitha. If these two were not there chennai would have suffered like a hell in the past. What the bloody DMK has brought or what is the long time vision scheme is brought to chennai or to tamilnadu. The only scheme brought to Tamilnadu was how to plan and rob the entire state and make their families rich.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X