வறண்ட வானிலை 2 நாள் நீடிக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறண்ட வானிலை 2 நாள் நீடிக்கும்

Added : டிச 19, 2020
Share
சென்னை:'அடுத்த இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சியால், இன்று பகல் வரையிலான காலகட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம்

சென்னை:'அடுத்த இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சியால், இன்று பகல் வரையிலான காலகட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

இதையடுத்து, வரும் இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும். தென் கடலோர மாவட்டங்களில் மட்டும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகரில், வானம் சில நேரம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 31; குறைந்தபட்சம், 25 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, புவனகிரி, 11; பரமக்குடி, பரங்கிப்பேட்டை, 7; இளையான்குடி, குடவாசல், 6; அய்யம்பேட்டை, மயிலாடுதுறை, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், நேற்று வரை, வடகிழக்கு பருவ மழை இயல்பை விட, 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X