சென்னை:தமிழக அரசு பள்ளிகளில், இளநிலை உதவியாளர் மற்றும் எழுத்தர் பதவியில், 484 புதிய பணியிடங்களுக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த அரசாணை:கடந்த, 2020 - 21ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நிர்வாக அலுவலக பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கு, 13 கோடி ரூபாய் செலவிடப்படும் என, கூறப்பட்டது.
இதை நிறைவேற்றும் வகையில், 484 புதிய பணியிடங்களை அனுமதிக்க, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கருத்துரு அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்து, அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படாத வகையில், 484 புதிய பணியிடங்களுக்கு, அனுமதி அளிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர் பணிக்கு, 389 பேரும், பதிவறை எழுத்தர் பணிக்கு, 95 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு மாற்றாக, 250 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான உபரி இடங்கள், அரசிடம் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE