தமிழ்நாடு

சைதை மருத்துவமனையில் நவீன ஆக்சிஜன் சிலிண்டர்

Added : டிச 19, 2020
Share
Advertisement
சைதாப்பேட்டை : முதலுதவி மற்றும் உள்நோயாளிகளின் சிகிச்சை தரத்தை மேம்படுத்த, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், நவீன ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்கப்பட உள்ளது.சென்னை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 1970ம் ஆண்டுக்கு முன் துவக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படுகிறது. தென்சென்னை சுற்றுவட்டார பகுதியில் நடக்கும் விபத்து மற்றும் இதர அவசர சிகிச்சைக்கு, பாதிக்கப்பட்டவரை முதலில்
 சைதை மருத்துவமனையில் நவீன ஆக்சிஜன் சிலிண்டர்

சைதாப்பேட்டை : முதலுதவி மற்றும் உள்நோயாளிகளின் சிகிச்சை தரத்தை மேம்படுத்த, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், நவீன ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்கப்பட உள்ளது.

சென்னை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 1970ம் ஆண்டுக்கு முன் துவக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படுகிறது. தென்சென்னை சுற்றுவட்டார பகுதியில் நடக்கும் விபத்து மற்றும் இதர அவசர சிகிச்சைக்கு, பாதிக்கப்பட்டவரை முதலில் கொண்டு செல்வது, இந்த மருத்துவமனைக்கு தான்.பாதிப்பை பொறுத்து, வெளிநோயாளி மற்றும் உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படுவோர், ஆம்புலன்சில், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

இக்கட்டான சூழலில், உயிரை காப்பாற்றிக் கொள்ள, இந்த மருத்துவமனை பெரும் உதவியாக இருக்கிறது. இந்த மருத்துவமனை தரத்தை உயர்த்த, 25 கோடி ரூபாயில், எட்டுமாடி கொண்ட கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. நிர்வாக சிக்கலால், ஐந்து ஆண்டுகளாக கோப்புகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த, மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. தற்போதுள்ள, ஆக்சிஜன் சிலிண்டர் மிகவும் பழமையானது. இதனால், நவீன ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான, அறை கட்டும் பணி, 5 லட்சம் ரூபாயில் நடக்கிறது. ஓரிரு மாதங்களில், நவீன ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X