கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை:தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு எதிராக, அவதுாறு வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வரை அவதுாறாக பேசியதாக, விழுப்புரம் நீதிமன்றத்தில், கனிமொழிக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கனிமொழி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனு, நீதிபதி

சென்னை:தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு எதிராக, அவதுாறு வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வரை அவதுாறாக பேசியதாக, விழுப்புரம் நீதிமன்றத்தில், கனிமொழிக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கனிமொழி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கனிமொழி சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''குற்றச்சாட்டு குறித்து, அரசாணையில் எதுவும் இல்லை. வழக்கு தொடர அனுமதி வழங்கி பிறப்பித்த, அரசாணை முறையானதாக இல்லை. அரசியல் காரணங்களுக்காக, வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை, ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

அரசின் தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ''அனைத்து விபரங்களையும் பரிசீலித்தே, வழக்கு தொடர ஒப்புதல் வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக்கூடாது,'' என்றார்.

இதையடுத்து, அவதுாறு வழக்கு தொடர, அனுமதி வழங்கிய, ஆவணங்களை தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.விசாரணையை, ஜன., 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார். விசாரணையின் போது, 'அரசு வழக்கறிஞர்கள், தபால் நிலையம் போல செயல்படக் கூடாது. எந்தெந்த வழக்குகளை தொடரலாம்; எவற்றை தொடரக்கூடாது என்பது குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும்' என, நீதிபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X