கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., போராட்ட வழக்கு அரசு பதில் அளிக்க உத்தரவு

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை:சட்ட விரோத போராட்டம் நடத்தும், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி தாக்கல் செய்த மனு:வன்னியர்களுக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் போராட்டங்களை நடத்தி வருகிறது. சட்ட விரோத

சென்னை:சட்ட விரோத போராட்டம் நடத்தும், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி தாக்கல் செய்த மனு:வன்னியர்களுக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் போராட்டங்களை நடத்தி வருகிறது. சட்ட விரோத போராட்டங்களை அனுமதித்தால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், ரயில் பாதையில் அமர்ந்து, ரயில் மீது கல் வீசி தாக்கியுள்ளனர்.

இவர்களின் போராட்டத்தினால், பொது மக்களின் சகஜ வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, சட்ட விரோத போராட்டங்களை நடத்த, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும். சட்ட விரோத போராட்டம் நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, மார்ச், 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். போராட்டத்தின் போது, ரயில் மீது கல் எரிந்த சம்பவம் நடந்ததால், தெற்கு ரயில்வே பொது மேலாளரையும் வழக்கில் சேர்த்து, பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X