அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியினரிடம் கருத்து தேர்தல் கமிஷன் குழு முடிவு

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை:தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழகம் வரும் தேர்தல் கமிஷன் உயர்நிலை குழு, அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, கருத்துக்களை கேட்க உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம், சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக, தேர்தல்

சென்னை:தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழகம் வரும் தேர்தல் கமிஷன் உயர்நிலை குழு, அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, கருத்துக்களை கேட்க உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம், சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக, தேர்தல் கமிஷன் பொதுச் செயலர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் கமிஷனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாஸா, தேர்தல் கமிஷன் இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, செயலர் மலாய் மாலிக் ஆகியோர் அடங்கிய குழு, நாளை மறுதினம் தமிழகம் வருகிறது.

இக்குழு, வரும், 21ம் தேதி காலை, சென்னை, கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கருத்துக் களை கேட்கிறது. அதன்பின், வருமான வரித் துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்துகிறது. அதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் ஆகியோருடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை நடத்த உள்ளது. மறுநாள் காலை, தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் அரசுத் துறை செயலர்களுடன், அக்குழு ஆலோசனை நடத்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X