தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 'நோட்டீஸ்'

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, கடந்த ஆண்டு, தமிழக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து, ஜி.மோகன் ராவ் உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக நெடுஞ்சாலை சட்டம், தமிழக தொழில்
நிலம், தமிழகஅரசு, சுப்ரீம்கோர்ட், நோட்டீஸ், உச்சநீதிமன்றம்

புதுடில்லி :நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, கடந்த ஆண்டு, தமிழக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து, ஜி.மோகன் ராவ் உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக நெடுஞ்சாலை சட்டம், தமிழக தொழில் நோக்கங்கள் சட்டம், தமிழக ஹரிஜன் நலச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை, தமிழக அரசு புதுப்பித்து, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த, 2013ல், பார்லி.,யில், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மீள் குடியேற்ற நடவடிக்கைகளில், வெளிப்படைத் தன்மையுடன், நியாயமான இழப்பீடு பெற உரிமை அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது.


latest tamil news



இந்த நோக்கத்திற்கு ஒத்து வராத மூன்று சட்டங்களை புதுப்பித்து, தமிழக அரசு இயற்றியுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, ஒத்து வராத சட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று, இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு, இது குறித்து பதில் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-டிச-202009:45:33 IST Report Abuse
ShivRam ShivShyam தரிசு நிலத்தை விவசாய நிலம் என்று பொய் சொல்லி போராட்டம் செய்ய உதவும் உச்ச அநீதி மன்றம்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-டிச-202005:38:27 IST Report Abuse
D.Ambujavalli எத்தனை தான் ஹைகோர்ட் , சுப்ரீம் கோர்ட் கண்டித்தாலும், அறிவுறுத்தினாலும் தங்கள் கான்டராக்ட், கமிஷனுக்காகப் பிடித்ததையே பிடித்துத் தொங்கும் அரசு எதற்கும் மசியாது
Rate this:
Cancel
Meevin - Madurai,இந்தியா
19-டிச-202001:15:50 IST Report Abuse
Meevin Good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X