பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் நில விவகாரத்தில் தவறான தகவல்

Added : டிச 19, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்க்கு மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் அடிப்படையில் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதில் தவறான தகவல் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க

மதுரை : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்க்கு மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் அடிப்படையில் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதில் தவறான தகவல் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. கட்டுமானத்திற்கு தாமதமின்றி நிதி ஒதுக்க வேண்டும். கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என 2018 ல் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2018 டிச.,6ல் விசாரணையின்போது மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பு செயலாளர், 'கேபினட் ஒப்புதல் கிடைத்தபின் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்கி 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்,' என அறிக்கை சமர்ப்பித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை பைசல் செய்தனர். இதை நிறைவேற்ற மத்திய அரசுத் தரப்பில் நடவடிக்கை இல்லை.தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும். அதற்கான நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு களுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: 2019 ஜன.,27ல் எய்ம்ஸ்க்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நிலத்தை மாநில அரசு ஒப்படைக்கவில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் அடிப்படையில் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை மாநில அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தாவிடில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என எச்சரித்து சிறிது நேரம் ஒத்திவைத்தனர்.பின் விசாரணையில் மாநில அரசுத் தரப்பு: 2019ல் 200 ஏக்கர், கூடுதலாக 22 ஏக்கரை பிப்ரவரியில் ஒப்படைத்து விட்டோம். சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.நீதிபதிகள்: தமிழகம், உ.பி., மேற்கு வங்கம், பஞ்சாபில் எய்ம்ஸ் அமைக்க 2015 ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏன்.மத்திய அரசுத் தரப்பு: நிலத்தை மாநில அரசு ஒப்படைத்துவிட்டது.

பணி துவங்க நிதி முக்கியம். நிதி தேவைக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் (ஜிக்கா) கடன் பெற 2021 மார்ச் 31 க்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும். பின் 45 மாதங்களில் பணி நிறைவடையும்.நீதிபதிகள்: நிலத்தை ஒப்படைக்கவில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் பெற்ற தகவல் அடிப்படையில் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு தவறான தகவல் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன என அதிருப்தி வெளியிட்டு, உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X