சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.3.42 கோடி மோசடி பெண் போலீசுக்கு சிறை

Added : டிச 19, 2020
Share
Advertisement
கோவை:ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி, 3.42 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பெண் போலீஸ் மற்றும் அவரது கணவர் உட்பட மூவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் சங்கர், 40; மனைவி காயத்ரி ஸ்ரீ, 38 மற்றும் சபின் கண்ணா, 33, ஆகியோர், 'கே.ஜி.பிரைட் லைவ் ஸ்டாக்' என்ற பெயரில், ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம்

கோவை:ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி, 3.42 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பெண் போலீஸ் மற்றும் அவரது கணவர் உட்பட மூவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் சங்கர், 40; மனைவி காயத்ரி ஸ்ரீ, 38 மற்றும் சபின் கண்ணா, 33, ஆகியோர், 'கே.ஜி.பிரைட் லைவ் ஸ்டாக்' என்ற பெயரில், ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தினர்.இந்நிறுவனத்தில், 2 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், 20 ஈமு கோழி, மாதந்தோறும் பராமரிப்பு செலவு மற்றும் ஆண்டுதோறும், 1.25 லட்சம் ரூபாய் வட்டி, மூன்று ஆண்டுகள் கழித்து, டிபாசிட் தொகை முழுதும் திருப்பி தருவது உட்பட ஐந்து திட்டங்களை அறிவித்தனர்.

இதை நம்பி, 73 பேர், 3.42 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால், முதிர்வு தேதி முடிந்த பிறகும், வட்டியும், முதலும் திருப்பி தராமல் மோசடி செய்தனர். கடந்த, 2012ல் மூவரையும் கைது செய்த, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 'டான்பிட்' எனப்படும், கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரித்த நீதிபதி ரவி, மூவருக்கும், தலா, 10 ஆண்டுகள் சிறை, 2.15 கோடி ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகையில், 2.14 கோடி ரூபாயை, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுக்க உத்தரவிட்டார்.தண்டனை பெற்ற காயத்ரி ஸ்ரீ, சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, கைது செய்யப்பட்டதால், 2012ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X