விருத்தாசலம் : புதர் மண்டி கிடக்கும் விருத்தாசலம் மினி விளையாட்டரங்கை சீரமைக்க, விளையாட்டு மேம்மபாட்டு ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லுாரி அருகே உள்ள மினி விளையாட்டரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதில் ஓட்டம், கால்பந்து, வாலிபால், பேட் மிட்டன், ெஷட்டில் உட்பட பல ஆடு களங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளன. 400 மீட்டருக்கு ஓட்டம், நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டது.இந்த நடை பாதையில் முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்கின்றனர். கிராமப்புற இளைஞர்கள், போலீஸ், ராணுவம் போன்ற உடற் தகுதி தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
புதர்மண்டியதுகடந்த ஓராண்டுக்கும் மேலாக மைதானம் பராமரிப்பின்றி ஓடு தளம் இருந்த தடமே தெரியாமல் புதர்மண்டியது. மழைக் காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், மைதானத்தில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. பள்ளி, கல்லுாரி அளவில் மாவட்ட, மண்டல, மாநில போட்டிகளும் இந்த விளையாட்டரங்கில் நடக்கும். சில ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகளில் போட்டிகள், நடத்தாததால், மைதானம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
விளையாட்டரங்கம் முழுவதும் புதர் மண்டியதால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஏழை, எளிய மாணவர்கள், இளைஞர்களின் கனவு, கானல் நீராக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.புதர் மண்டி கிடக்கும் மினி விளையாட்டரங்கத்தை சீரமைக்க, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விரைந்து நடவடக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE