பொது செய்தி

தமிழ்நாடு

விருது பெற்ற மாஜி படை வீரர்களுக்குவீட்டு வரியை அரசே வழங்க உத்தரவு

Added : டிச 19, 2020
Share
Advertisement
கடலுார் : வீரதீரச் செயலுக்கான விருதுகள் பெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரியை முன்னாள் படை வீரர் நல நிதியிலிருந்து ஈடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:போர் விதவையர், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படை வீரர்களின் விதவையர், போரில் ஊனமுற்ற படைவீரர் மற்றும் வீரதீரச் செயலுக்கான விருதுகள் பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தாங்கள்

கடலுார் : வீரதீரச் செயலுக்கான விருதுகள் பெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரியை முன்னாள் படை வீரர் நல நிதியிலிருந்து ஈடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:போர் விதவையர், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படை வீரர்களின் விதவையர், போரில் ஊனமுற்ற படைவீரர் மற்றும் வீரதீரச் செயலுக்கான விருதுகள் பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தாங்கள் வசிக்கும் வீட்டிற்கான வீட்டு வரியை தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது நகராட்சி நிர்வாகங்களில் வரிகள் உயர்த்தியதால் வீட்டு வரியை அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் (அல்லது) செலுத்திய அசல் தொகை, இதில் எது குறைவோ அத்தொகையை திரும்ப பெற தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற தொலைபேசிஎண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X