சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன கட்டைகள் பதுக்கல் வன அதிகாரி 'சஸ்பெண்ட்'

Added : டிச 19, 2020
Share
Advertisement
கோவை:கோவை வனச்சரகரின் மனைவி வீட்டில், 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வனச்சரகர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகராக பணியாற்றுபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி கலைவாணி, இளைய மகனுடன் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் வசிக்கிறார்.இந்நிலையில், கலைவாணி பெயரில் இருக்கும் தோட்டத்து வீட்டில், 327

கோவை:கோவை வனச்சரகரின் மனைவி வீட்டில், 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வனச்சரகர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகராக பணியாற்றுபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி கலைவாணி, இளைய மகனுடன் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் வசிக்கிறார்.இந்நிலையில், கலைவாணி பெயரில் இருக்கும் தோட்டத்து வீட்டில், 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறையினரால், நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரி வீட்டிலேயே, சந்தனக் கட்டைகள் சிக்கிய சம்பவம், வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வெட்டியது எங்கே?கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்தில் சந்தன மரக் கடத்தல் அவ்வப்போது நடக்கிறது. கடந்த ஆண்டு, நவ., - டிச., மாதங்களில் முள்ளாங்காடு, போராத்தியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன.

கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில், ஆரோக்கியசாமி, காரில் ஸ்ரீவில்லிபுத்துார் சென்று வந்துள்ளார். வேட்டை தடுப்பு காவலர் கார் ஓட்டியுள்ளார். ஆரோக்கியசாமி, இதற்கு முன் குற்றாலத்திலும், முதுமலையிலும் பணியாற்றியவர். இவரது மகன், மகள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்கின்றனர்.இது குறித்து, கலைவாணி, வனச்சரகர் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. கலைவாணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வனச்சரகர் ஆரோக்கியசாமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X