பாகூர் : கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
ஏ.டி.ஜி.பி., ஆனந்த மோகன், நேற்று காலை 9.30 மணியளவில், கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பார்வையிட்டார். பின்னர், எழுத்தர் பிரிவு, ஆயுதக் கிடங்கு, காவலர் ஓய்வு அறைகளை பார்வையிட்ட அவர், குற்ற வழக்குகளின் நிலை, ரவுடிகளின் மீதான கண்காணிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவை தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து, கூடுதல் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, ''பொது மக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் காலம் நெருங்கி வருவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இளஞைர்களை சீரழிக்கும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது தெற்கு எஸ்.பி., லோகேஸ்வரன, இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, வரதராஜன், தன்வந்திரி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE