சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை வனச்சரகர் சஸ்பெண்ட் வழக்குபதிய வனத்துறை தீவிரம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
கோவை:கோவை வனச்சரகரின் மனைவி கலைவாணியின் ஸ்ரீவி., வீட்டில் 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதில் வனச்சரகர் ஆரோக்கியசாமி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் மீது வழக்குபதிய வனத்துறையினர் தீவிரம்காட்டி வருகிறார்கள்.கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகராக பணியாற்றுபவர் ஆரோக்கியசாமி. மனைவி கலைவாணி, இளைய மகனுடன் விருதுநகர் மாவட்டம்,

கோவை:கோவை வனச்சரகரின் மனைவி கலைவாணியின் ஸ்ரீவி., வீட்டில் 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதில் வனச்சரகர் ஆரோக்கியசாமி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் மீது வழக்குபதிய வனத்துறையினர் தீவிரம்காட்டி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகராக பணியாற்றுபவர் ஆரோக்கியசாமி. மனைவி கலைவாணி, இளைய மகனுடன் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் வசிக்கிறார். கலைவாணி பெயரில் இருக்கும் தோட்டத்து வீட்டில், 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறையினரால், நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டன.

கலைவாணி, வனச்சரகர் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. கலைவாணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வனச்சரகர் ஆரோக்கியசாமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மாநில வனத்துறைக்கு அறிக்கை சமர்பித்ததும் ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக விருதுநகர் மாவட்ட வனஅலுவலர் முகமதுஷாபாப் தெரிவித்தார். இவர்களின் மகன், மகள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X