மூணாறு:கேரளாவில் 10ம் வகுப்பு பிளஸ் -2 மற்றும் தொழில் பயிற்சி மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகள் மார்ச் 17 முதல் மார்ச் 30 வரை நடத்த முதல்வர் பினராயிவிஜயன் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் கேரளாவில் ஜூன் முதல் ஆன்லைனில் பள்ளி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு ஏற்பாடுகளை கவனிக்க பள்ளி கல்விதுறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செயல்திறன் தேர்வுக்கு தயாராகுவோருக்கு ஜனவரி 1 முதல் வகுப்புகள் துவங்கவுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளின் சந்தேகங்களை ஜனவரி முதல் பள்ளிகளில் கேட்டு கொள்ளலாம். பள்ளியில் நடக்கும் மாதிரி தேர்வு மற்றும் மன உளைச்சலை தவிர்ப்பதற்கான கலந்தாய்வில் 10, பிளஸ்- 2 மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE