சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி தங்க கட்டி மோசடி காரைக்குடி, ஆந்திரா தம்பதிகள் கைது

Added : டிச 19, 2020
Share
Advertisement
சிவகாசி:தங்கக்கட்டி மோசடி வழக்குகளில் காரைக்குடி அருகே பள்ளத்துார் மாணிக்கம் 27, மனைவி கயல்விழி, ஆந்திராவை சேர்ந்த சிவசங்கர ராவ் 36, மனைவி அங்கம்மா 32, வை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு 35. இவரும், மனைவி கார்த்திகா இணைந்து எரிச்சநத்தத்தில் ஓட்டல் வைத்துள்ளனர். நவ. 20ல் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர ராவ்,

சிவகாசி:தங்கக்கட்டி மோசடி வழக்குகளில் காரைக்குடி அருகே பள்ளத்துார் மாணிக்கம் 27, மனைவி கயல்விழி, ஆந்திராவை சேர்ந்த சிவசங்கர ராவ் 36, மனைவி அங்கம்மா 32, வை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு 35. இவரும், மனைவி கார்த்திகா இணைந்து எரிச்சநத்தத்தில் ஓட்டல் வைத்துள்ளனர். நவ. 20ல் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர ராவ், மனைவி அங்கம்மா தென்னரசு ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர். இவர்கள் தென்னரசிடம் எங்களுக்கு தங்க புதையல் கிடைத்தது. தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளோம் என கூறி தங்க கட்டியின் ஒரு பகுதியை கொடுத்துள்ளனர்.

பரிசோதித்ததில் உண்மையான தங்கமாக இருந்தது. டிச. 17 ல் தங்க கட்டியை வாங்கிய தென்னரசு அதற்கு பதிலாக 2 பவுன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளார். தங்க கட்டியை சோதனை செய்த போது போலி என்பது தெரிய வந்தது.எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்த நிலையில், இதே தம்பதி அருப்புக்கோட்டையில் ஒரு பெண்ணிடம் இதே போல் ஏமாற்ற முயற்சி செய்தபோது போலீசாரிடம் சிக்கினர்.

இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து அலைபேசிகள், நகைகள், போலி தங்க கட்டி, சுத்தியல், அரிவாள், பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.பாதி விலைக்கு தங்க கட்டிசிவகங்கை மாவட்டம் பள்ளத்துார் மாணிக்கம் -- மனைவி கயல்விழி தம்பதி ரூ.3 கோடி, 500 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு தங்ககட்டிகள் கொடுக்காமல் தலைமறைவானதாக 30க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டினார்.

ஜூலையில் காரைக்குடி டி.எஸ்.பி. அருணிடம் புகார் செய்யப்பட்டது. நேற்று கோவை சிங்காநல்லுாரில் தம்பதியை போலீசார் கைது செய்தனர். டி.எஸ்.பி., கூறுகையில், ''தம்பதி ரூ.70 லட்சம் பணம், 67 பவுன் நகை பெற்று ஏமாற்றியதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் பணம், நகை கொடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X