காரைக்குடி:'வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதுகாப்பும், நன்மையும் உள்ளது.,' என பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் மேலும் கூறியதாவது;டில்லி போராட்டத்தில் விவசாயிகள் ஒருவர் கூட இல்லை.
தற்போது, டில்லியில் போராடுபவர்கள் பாதாம்பருப்பு, பிஸ்தாபருப்பு, வாஷிங்மெஷின், மசாஜ், வாட்டர் ஹீட்டர்,கொடுக்கிறேன் எனக்கூறி அழைத்து வந்தவர்களாகவே இருக்கும்.காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்காக போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி. ஆனால், டெல்டா விவசாயிகளின் உரிமைகளை திரும்ப பெற்று தந்தவர் ரங்கநாதன். வேளாண் சட்டத்தை ரங்கநாதனர் ஆதரிக்கிறார்.
சாராய முதலாளி டி.ஆர்.பாலு எதிர்க்கிறார்.உண்மையான விவசாய சங்கங்கள் அரசுடன் பேச தயாராக உள்ளது. விவசாயின் நண்பன் மோடி என்ற திட்டத்தின் மூலம், அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளை அழைத்து வேளாண் சட்டங்கள் குறித்து விளக்க உள்ளோம்.ரஜினி பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக யாரும் கூறவில்லை.
ரஜினி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் கமலும் இதுவரை எதுவும் செய்யவில்லை. கமல் அரசியலுக்கு வருவதற்கு உரிமை இருக்கிறது என்றால், ரஜினிக்கும் உரிமை உள்ளது. ரஜினி ரசிகர்கள் அனைத்து கட்சியிலும் இருக்கிறார்கள். தி.மு.க.,வில் தான் அதிகம் இருக்கிறார்கள். 1996ல் ரஜினி முதன் முதலில் தி.மு.க.,விற்காகவே குரல் கொடுத்திருக்கிறார். எனவே, ரஜினியின் அரசியல் பிரவேசம் தி.மு.க.,விற்கு தான் பாதகம்., என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE