ஓசூர்:ஓசூர் சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார், இரண்டாவது முறையாக சோதனை நடத்தி, கணக்கில் வராத, 2.55 லட்சம் ரூபாயை, பறிமுதல் செய்தனர்.
தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி அருகே, பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து உள்வழி சோதனைச்சாவடி உள்ளது. சோதனைஇங்கு, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, தற்காலிக அனுமதி சீட்டு மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்காலிக அனுமதி சீட்டு வழங்கும் போது, குறிப்பிட்ட கட்டணத்தை விட, கூடுதல் பணம் வசூல் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து, அக்டோபர், 16 இரவு, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத, 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 120 ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக, நேற்று அதிகாலை, 4:00 முதல் காலை, 8:00 மணி வரை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கணக்கில் வராத, 2.55 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, 'டோல்கேட்' பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர்.பறிமுதல்ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நவ., 27ல் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 1 லட்சத்து, 51 ஆயிரத்து, 698 ரூபாயை, பறிமுதல் செய்தனர்.
அதேபோல, இம்மாதம் 12ல், ஓசூர் ஜூஜூவாடி வெளிவழி சோதனைச்சாவடி மற்றும் பாகலுார் சாலையில் உள்ள சோதனை சாவடியில் சோதனை செய்து, 2 லட்சத்து, 10 ஆயிரத்து, 20 ரூபாயை கைப்பற்றினர்.
'சஸ்பெண்ட்'
சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள, சுற்றுச்சூழல் இயக்கக கண்காணிப்பாளர் பாண்டியன் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கம், வைர நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள, பாண்டியன், நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE