சென்னை:''பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாசாரத்தை சீரழிக்கும் கமல், மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னை, ராயபுரம், கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியில், இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:'சிலர், ஆசைக்கும் தேவைக்கும், வாழ்வுக்கும் வசதிக்கும், ஊரார் கால் பிடிப்பார்' என, கமல் வெளியிட்ட பதிவு, அவருக்கு தான் பொருந்தும். அவர் தான், எம்.ஜி.ஆர்., தொண்டர்களின் காலையும், அ.தி.மு.க.,வினர் காலையும் பிடித்து வருகிறார்.இரண்டாவது, அவர் குறிப்பிடுவது, தி.மு.க.,வை தான். '2 ஜி' ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, கூட்டணியை விட்டு வெளியேறாமல், தி.மு.க., பதவி மோகத்தில், காங்கிரஸ் காலை பிடித்துக் கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆரை எந்த கட்சியினரும், உரிமை கொண்டாட முடியாது. அவர் பெயரை சொல்லக் கூட, கமலுக்கு தகுதி கிடையாது. சுயநலத்திற்காக, அவர் பெயரை பயன்படுத்துவதை, கமல் நோக்கமாக கொண்டுள்ளார். ரஜினி, கட்சி துவங்கினாலும், மக்களின் அங்கீகாரம், அ.தி.மு.க.,விற்கு தான்.தமிழ்நாட்டுக்கு, தி.மு.க., செய்த துரோகத்திற்கு, தேர்தல் நேரத்தில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, குடும்ப சீரழிவிற்கு துணை போகிறது. இந்நிகழ்ச்சி வாயிலாக, கலாசாரத்தை சீரழிக்கும் கமல், மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்?இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE