ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே ஏரி கால்வாய் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஆனதால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மழையினால் மரூர் பாப்பாந்தாங்கல் ஏரி முழுகொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறியது. நேற்று அதிகாலை நீர் செல்லும் வாய்க்காலின் கரை உடைந்ததால், தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விளை நிலங்களிலும், சாலையிலும் கரை புரண்டோடியது.தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால், மரூர் - ஏந்தல் வரை செல்லும் 4 கி.மீ., தொலைவிலான சாலையின் ஓரப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சிக்கும் நிலை இருப்பதால், சங்கராபுரம் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரத்தில் குச்சிகளை நட்டு, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக சிவப்பு ரிப்பன் கட்டியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE