கன்னிவாடி : 'ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது' என, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் விசுவநாதன் பேசினார்.
மாங்கரை கொட்டாரபட்டியில் அ.தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார்.மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் விஜயபாலமுருகன், எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் ராஜ்மோகன், மாணவரணி செயலாளர் கோபி முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட செயலாளர் விசுவநாதன் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் எம்.எல்.ஏ., பெரியசாமியால் எந்த பலனும் கிடைக்கவில்லை. வெறும் வாக்குறுதி கொடுப்பதுதான் அவர் வழக்கம்.தமிழக முதல்வராவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது கனவு பலிக்காது.
வரும் தேர்தலிலும் அ.தி.மு.க., வென்று முதல்வர் பழனிசாமி தொடர்ந்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவார்'' என்றார்.பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE