வடமதுரை : மோர்பட்டி மயானத்திற்கென தனிப் பாதை ஏதுமில்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இங்குள்ள காலனி பகுதி மக்களுக்கென இருக்கும் மயானம் தும்மலக்குண்டு வாய்க்கால் ஓரம் உள்ளது. இப்பகுதிக்கு செல்ல முறையான பாதை கிடையாது. இதனால் இறுதி ஊர்வலம் 150 மீட்டர் துாரம் தனியார் விளை நிலங்கள் வழியே செல்கின்றன. தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் பயிர்களை சேதம் செய்து ஊர்வலம் நடப்பதை கண்டு மனம் வெதும்புகின்றனர்.ஊர்வலத்தை தடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. எனவே, 150 மீட்டர் நீளமுள்ள தனியார் நிலத்திற்கு உரிய விலை கொடுத்து கையகம் செய்து முறையான பாதை வசதியை ஒன்றிய நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE