கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் அரசு நிலங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பிரச்னை மீது மீண்டும் நடவடிக்கையை துவக்க வேண்டும்.
சுற்றுலா நகரான கொடைக்கானலில் சொத்துக்கள் இருப்பது அந்தஸ்து என்ற நோக்கில் வி.ஐ.பி., க்கள் பலர் இங்கு மூதலீடு செய்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன் டி.கே.டி பட்டா ( நிலமில்லா விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிலம்) என்ற பெயரில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன்ரியல் எஸ்டேட் அதிபர்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.நகரம், ஊராட்சி பகுதிகள் என அரசு நிலத்தை கபளீகரம் செய்து பட்டா மாற்றப்பட்டன. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் பலர் புகார் தெரிவித்து வந்தனர். இவ்வாறு வழங்கப்பட்ட நுாற்றுக்கணக்கான போலி பட்டாக்களை கடந்தாண்டு ஆர்.டி.ஓ., சுரேந்திரன் ரத்து செய்தார்.
இதற்கு துணைபோன வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த் துறையினரை கூண்டோடு மாற்றம் செய்தார்.இதையடுத்து ஆர்.டி.ஓ., இடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போதைய ஆர்.டி.ஓ., சிவகுருபிரபாகரனும் இவ்விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்தால் ஏகப்பட்ட போலி பட்டாக்கள் சிக்க வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE