கோவை:கோவை வெள்ளலுார் பகுதியில், ஒரே கதவு எண்ணில் 22 வாக்காளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் வரைவு பட்டியல் கடந்த மாதம், 16ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யும் பணிகள் நடந்தன.இரண்டு கட்டமாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில், 1,70,419 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இது சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.இறுதி வாக்காளர் பட்டியல், 2021, ஜன., 20ல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை வெள்ளலுார், 5வது வார்டு அசோகர் வீதியில் அமைந்துள்ள 5/20 என்ற கதவு எண் பதிவில், 22 வாக்காளரின் பெயர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.ஒரே குடும்பத்தில், 22 பேர் என்பதுசாத்தியமற்றது. பட்டியலிலுள்ள வயது, தந்தை பெயர் உள்ளிட்ட விபரங்களின் படி அவர்கள் அனைவரும் ஒரேகுடும்பத்தை சேர்ந்தவர்களும் இல்லை.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த குளறுபடி பற்றி மதுக்கரை தாசில்தார் நாகலிங்கத்திடம் கேட்டபோது, ''இது குறித்து இதுவரை புகார் வரவில்லை. விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார். குளறுபடியை களைந்து, இறுதிப்பட்டியல் வெளியிட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE