கொடைக்கானல் : கொடைக்கானலில் சட்டசபை பொதுக் கணக்கு குழுவினர் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் பழனி வேல்தியாகராஜன், ராஜா, உதயசூரியன் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர், மாவட்டத்தில் பல இடங்களில் ஆய்வு செய்தனர்.நேற்று கொடைக்கானல் வந்த அவர்கள், நகராட்சி மேற்கொள்ளும் ரூ. 44 கோடி மதிப்பிலான கீழ்க்குண்டாறு குடிநீர் திட்டம் மற்றும் வனத்துறை உயிர்ப்பன்மை திட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு விடுதியில் நடந்த கூட்டத்தில், சட்டசபையில் அறிவித்த மானிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறதா, தவறுகள் நடந்துள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். நகராட்சி கமிஷனர் நாராயணன், வன அதிகாரி தேஜஸ்வி, தாசில்தார் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பழநியில் ஆய்வுபின்னர் பழநி வந்த பொதுக் கணக்கு குழுவினர் குடிநீர் வினியோகிக்கும் ரூ.15 கோடி மதிப்பிலான கோடை நீர்தேக்க விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தனர். பின் மலைக்கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அவர்களை ஆர்.டி.ஒ., அசோகன், செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, இணை ஆணையர் செந்தில்குமார், தாசில்தார் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையர் லட்சுமணன் வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE