பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரியத்தில் விரைவில் போராட்டம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை:ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, ஊழியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் வாரிய தொழிற்சங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.தமிழக மின் வாரியம், பிரிவு அலுவலகங்களில் உள்ள, ஒயர்மேன், உதவியாளர் பதவிகளில், காலி பணியிடங்களுக்கான ஆட்களை, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக நியமிக்க, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு எதிர்ப்பு

சென்னை:ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, ஊழியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் வாரிய தொழிற்சங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

தமிழக மின் வாரியம், பிரிவு அலுவலகங்களில் உள்ள, ஒயர்மேன், உதவியாளர் பதவிகளில், காலி பணியிடங்களுக்கான ஆட்களை, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக நியமிக்க, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:ஒப்பந்த ஊழியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்தும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டம் குறித்தும், ஆலோசிக்கப்பட்டது. இரு தினங்களில், அனைத்து சங்கங்களின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X