மதுரை : மதுரை மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்ததா என 2280 பள்ளி, கல்வி நிறுவனங்களில் மறுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கல்வி நிறுவனங்கள், அலுவலர்கள் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்த போது தேசிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஆய்வின் போது தெரிவித்தது.தகுதியான மாணவர்களுக்கு உதவி தொகை சென்றடைந்ததா என மாவட்டங்கள் வாரியாக நடந்த பதிவேற்றத்தின் உண்மை தன்மை கண்டறிய உத்தரவிடப்பட்டது.
மதுரையில் 2019 - 2020 மற்றும் 2020 - 2021ல் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 2280 கல்வி நிறுவனங்கள் மற்றும் அதற்குட்பட்ட பள்ளிகளில் மறுஆய்வு நடக்கவுள்ளது.மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2168 பள்ளிகள், ஐ.டி.ஐ.,க்களுக்கு 30 வட்டாரக் கல்வி அலுவலர்கள், 112 கல்லுாரி கல்வி நிறுவனங்களுக்கு 10 துணை தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டிச.,22க்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE